கிரிக்கெட் (Cricket)

அதிக வாய்ப்பு கிடைக்கல.. ஆனால் விக்கெட் எடுப்பாருனு நம்பினோம் - ருதுராஜ் கெய்க்வாட்

Published On 2024-05-05 16:22 GMT   |   Update On 2024-05-05 16:22 GMT
  • பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம்.
  • இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசி அசத்திய சிமர்ஜித் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

"பிட்ச் ஸ்லோவாக இருந்ததை அனைவரும் நம்பினர். எனினும், பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம். பிறகு, துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த சமயத்தில் 160 முதல் 170 வரை அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம்."

"சிமர்ஜித் சிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இதுவும் தாமதம் இல்லை. நாங்கள் இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம், ஆனால் சிமர்ஜித் சிங் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்பிக்கை இருந்தது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News