null
டி காக், பூரன் கேட்ச் மிஸ் தோல்விக்கு முக்கிய காரணம்- டு பிளிஸ்சிஸ்
- லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது.
- ஆர்சிபி 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹோம் மைதானத்தில் ஆர்சிபி-க்கு இது 2-வது தோல்வியாகும். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டிக்குப்பின் ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-
இரண்டு கேட்ச்களை தவற விட்டது, அதற்கான விலை (தோல்வி) எங்களுக்கு கிடைத்துவிட்டது. இரண்டும் தலை சிறந்த வீரர்கள், டி காக் 25-30 ரன்கள் இருக்கும்போது அவுட்டில் இருந்து தப்பித்தார். பூரன் 2 ரன்னில் தப்பினார். இதனால் கூடுதலாக 60-65 ரன்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுபோன்ற தவறுகளுக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
மயங்க் யாதவ் தற்போது அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். நாங்கள் இதற்கு முன்னதாக அவரது பந்து வீச்சை எதிர்கொண்டது இல்லை. இதுபோன்ற வேகப்பந்துகள் வீசப்படும்போது அதை பழக்கப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் தேவை. ஆனால் கன்ட்ரோல் லெந்த் மற்றும் துல்லியம் ஆகியவற்றில் அவருடைய திறமை ஈர்க்க வைக்கிறது.
பவர் பிளேயில் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை என்பதால் மேக்ஸ்வெல் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் கட்டுப்படுத்தினார். டெத் ஓவர் சற்று மகிழ்ச்சி அளித்தது. இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைப்பது அவசியம். அது எங்களுக்கு கிடைக்காமல் போனது.
படிதர்-ராவத் ஜோடியின் 36 ரன்கள் லக்னோ அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியவில்லை. மஹிபால் லோம்ரோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழந்ததும் எங்களுடைய சிறிய நம்பிக்கையும் தகர்ந்தது. மூன்று வடிவிலான துறையிலும் லக்னோ சிறப்பாக செயல்பட்டது.
இவ்வாறு டு பிளிஸ்சிஸ் தெரிவித்தார்.