கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல் டி20- பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

Published On 2023-05-17 17:53 GMT   |   Update On 2023-05-17 17:58 GMT
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
  • பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர்.

அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ரன்களில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

தொடர்ந்து, அதர்வா டைட் 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களும், சாம் குரான் 11 ரன்களும், ஷாருக்கான் 6 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ரன்கள் எடுக்கவில்லை.

இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

Tags:    

Similar News