ஐ.பி.எல் டி20 போட்டி- ஐதராபாத் அணியை வீழத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
- ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஹெயின்ரிச் கிளாசன் 36 ரன்களும், அப்துல் சமாத் 21 ரன்களும், ராகுல் திரிபாதி 20 ரன்களும், மயங்க் அகர்வால் 18 ரன்களும், அபிஷேக் சர்மா 9 ரன்களும், மார்கோ ஜான்சன் ஒரு ரன்னும் எடுத்தனர்.
புவனேஷ்வர் குமார் 5 ரன்களுடனும், மயங்க் மார்கண்டே ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.