கிரிக்கெட் (Cricket)

நானும் டோனியும் சேர்ந்து விளையாடும் கடைசி போட்டியாக கூட இது இருக்கலாம் - விராட் கோலி

Published On 2024-05-18 11:33 GMT   |   Update On 2024-05-18 11:33 GMT
  • டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள்.
  • நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள். நானும் அவரும் திரும்பவும் விளையாடுவோமா? ஒருவேளை இதுதான் கடைசிப் போட்டியா? எது நடக்கும் என்று தெரியாது.

நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

42 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற போகிறார் என்பதைத்தான் விராட் கோலி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News