இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் கடந்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை
- டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார்.
- டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும்
சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர், 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 774 ரன்கள் குவித்ததே இதுவரை தனிப்பட்ட இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
மேலும், டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.