கிரிக்கெட் (Cricket)

பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த கோலி- ரோகித் ஜோடி

Published On 2023-09-13 06:34 GMT   |   Update On 2023-09-13 06:34 GMT
  • இந்த போட்டியில் ரோகித் சர்மா 53 ரன்னில் அவுட் ஆனார்.
  • விராட் கோலி 3 ரன்னில் வெளியேறினார்.

சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டி தகுதி பெற்றது.

இந்நிலையில் ரோகித் - விராட் கோலி ஜோடி பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 10 ரன் எடுத்தது. இதையும் சேர்த்து அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். 86 ஒருநாள் போட்டி இன்னிங்சில் இதை எட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே அதிவேகமாக இருந்தது.

மேலும் இந்திய தரப்பில் டெண்டுல்கர் சவுரவ் கங்குலி, ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோருக்கு பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த ஜோடியாகவும் ரோகித்- கோலி திகழ்கிறார்கள்.

Tags:    

Similar News