பேட்ஸ்மேன்கள் அதிரடி: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 182 ரன்கள் குவிப்பு
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.
பார்படாஸ்:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பார்படாசில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதனால்
18 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
நிகோலஸ் பூரன், ஆண்ட்ரூ ரசல் ஜோடி அதிரடியாக ஆடியது. பூரன் 38 ரன்னும், ரசல் 30 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் குடகேஷ் மோடே விளாசி 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்களைக் குவித்தது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 4 விக்கெட்டும் அடில் ரஷீத் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.