5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா பயணம்
- முதல் டெஸ்ட போட்டி பெர்த் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
- ஜனவரி 7-ந்தேதி கடைசி டெஸ்ட் சிட்னியில் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.
இந்திய அணி 2 கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகிறது. முதல் குழு நாளை புறப்படுகிறது. நாளை மறுநாள் 2-வது குழு ஆஸ்திரேலியா செல்கிறது.
இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.