null
கிரிக்கெட் மைதானத்தில் லைட்டர் கேட்ட மார்னஸ் லாபுசாக்னே- வைரலாகும் வீடியோ
- இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து லைட்டர் கேட்டார்.
- சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 0 ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
Marnus Labuschagne repaired his helmet with a lighter ?#AUSvSA #CricketTwitter pic.twitter.com/orql0cSQHW
— CricWick (@CricWick) January 4, 2023
இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து புகைப்பிடிப்பது போல சைகை காட்டி லைட்டர் கேட்டார். இதை கவனித்த வர்ணனையாளர்கள் சிரித்தபடி கமெண்ட் செய்தனர்.
அவர் ஹெல்மெட் சரிபார்ப்பதற்காக அதை கேட்டார். ஆனால் இது சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.