மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது மும்பை
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
- குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
மும்பை சார்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
4 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.