null
எம்.எஸ்.டோனி ஒரு ஹீரோவை போல கொண்டாடப்படுகிறார்- ஆச்சரியப்பட்ட லக்னோ பயிற்சியாளர்
- சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
- இந்தியாவில் தோனியின் வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி அவர் பேசினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
இதனையடுத்து சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பிபிசி ஸ்போர்ட் மீடியாவில் பேசிய லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஐபிஎல்-ல் ஒரு அணியை நிர்வகித்த தனது முதல் அனுபவத்தைபகிர்ந்தார்.
அப்போது இந்தியாவில் டோனியின் வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி அவர் பேசினார். அதில், "சிஎஸ்கே அணி லக்னோவுக்கு வந்தபோது 50,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில் கிட்டத்தட்ட 48,000 பேர் டோனியின் '7' ஜெர்சி அணிந்திருந்தனர். லக்னோ அணிசென்னைக்குச் சென்றபோது 100% டோனி ஜெர்சியை அணிந்திருந்தனர். இந்தியாவில் ஒரு மனிதர் இந்த அளவுக்கு ஹீரோ போல கொண்டாடப்படுவதை என்னால் நம்பவே முடியவில்லை.
இந்தியாவில் இதற்கு முன் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கரை அவ்வாறு பார்த்துள்ளேன். பின்னர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலி, டோனி கொண்டாடப்பட்டனர். ஆனால் இங்கே அதை விட அதிகமாக டோனியை கொண்டாடுகின்றனர்" என்று அவர் கூறினார்.