கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

Published On 2024-06-07 09:06 GMT   |   Update On 2024-06-07 09:06 GMT
  • முதலில் ஆடிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
  • ஸ்காட்லாந்து 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

பார்படாஸ்:

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது. ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர். மைக்கேல் லீஸ்க் 35 ரன் எடுத்து அவுட்டானார்.

இறுதியில், ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

35 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Tags:    

Similar News