கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: கெயில் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்

Published On 2024-06-18 10:37 GMT   |   Update On 2024-06-18 10:37 GMT
  • நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
  • கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

செயிண்ட் லூசியா:

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்களை குவித்தார்.

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 114 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரன் 128 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.

கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News