இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: கோலி, ரோகித், பும்ராவுக்கு ஓய்வு கிடையாது- கம்பீர்
- இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
- இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.
இந்திய அணி 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து ஒருநாள் தொடரும் அதன் பின் டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.
டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் ரோகித், விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்தனர். இதனால் ரோகித், விராட் மட்டுமின்றி பும்ரா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
மேலும் டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாக பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.