டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் மகத்தான சாதனை படைத்த நியூசிலாந்து
- இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்றது.
- நியூசிலாந்து 3 போட்டிகளிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.
மும்பை:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 3-வது நாள் முடிவதற்குள் இந்தப் போட்டியில் நியூசிலாந்து 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆட்டநாயகன் விருது அஜாஸ் படேலுக்கும், தொடர் நாயகன் விருது வில் யங்குக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை நியூசிலாந்து படைத்தது.