டெஸ்ட் தொடரில் இந்தியாவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
- சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
- அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மும்பை:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஷ்வாலும் களம் இறங்கினார்கள்.
ரோகித் சர்மா 11 ரன்னில் ஹென்றி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 121 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியை வென்ற நியூசிலாந்து 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.