கிரிக்கெட் (Cricket)

சொந்த மண்ணில் முதல் முறை.. விராட் கோலி மோசமான சாதனை..!

Published On 2024-11-03 13:46 GMT   |   Update On 2024-11-03 13:46 GMT
  • தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
  • விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பியது, தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களை அடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களை அடித்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். 

Tags:    

Similar News