null
உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது சதம்- 3 சாதனை பட்டியலில் இடம் பிடித்த டி காக்
- பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- டிகாக் இந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது சதத்தை விளாசியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.
அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய பவுமா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - வான்டெர் டஸன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் சதம் அடித்து அசத்தினார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இது இவருக்கு 4-வது சதம் ஆகும். ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் டிகாக் உள்ளார். முதல் இடத்தில் ரோகித் (5 சதம்) 2-வது இடத்தில் குமார் சங்ககாரா (4) உள்ளனர்.
மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 21 சதங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் ஹசிம் அம்லா (27 சதம்) டி வில்லியர்ஸ் (25 சதம்) ஆகியோர் உள்ளனர்.
மிக முக்கிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒரு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையை டி காக் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கல்லீஸ் 9 இன்னிங்சில் விளையாடி 485 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை டிகாக் முறியடித்துள்ளார்.