நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் சதம்: ஆஸ்திரேலியா 279/9
- ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
- மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்கடனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். கிரீன் களம் இறங்கியதும் கவாஜா 33 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 89 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு கேமரூன் க்ரீன் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஒருபுறம் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் கேமரூன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியவில்லை.
ஹென்றி
ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது. கேமரூன் க்ரீன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹேசில்வுட் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.
அலேக்ஸ் கேரி 10 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 9 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வில்லியம் ஓ'ரூர்கே, ஸ்காட் குக்கெலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரச்சின் ரவிந்திரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.