முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டி: வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
- முத்தரப்பு தொடரில் வங்களா தேசம் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
- முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காள தேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் சகீப் அல்ஹசன் மற்றும் தாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்காள தேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் -பாபர் அசாம் ஜோடி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர். பாபர் 40 பந்துகளில் 55 ரன்களிலும் அடுத்து வந்த அலி 0 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து வந்த முகமது நவாஸ் -ரிஸ்வான் ஜோடி அதிரடியாக விளையாடினார். ரிஸ்வான் 69 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய நவாஸ் 20 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 19.5 ஓவரில் பாகிஸ்தான் அணி 177 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில் வங்களா தேசம் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.