கிரிக்கெட் (Cricket)
null

கல்யாணம் முடிச்சா கப்பு.. 4-வது கேப்டனாக உலகக் கோப்பையை கைப்பற்றிய கம்மின்ஸ்

Published On 2023-11-20 08:14 GMT   |   Update On 2023-11-20 09:44 GMT
  • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார்.
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அகமதாபாத்:

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.

இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4-வது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.


அதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.


அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.


இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

Tags:    

Similar News