கிரிக்கெட் (Cricket)
null

2025 சாம்பியன்ஸ் டிராபியை நாங்கள்தான் நடத்துகிறோம்: ஒப்பந்தம் கையெழுத்தானது என பாகிஸ்தான் அறிவிப்பு

Published On 2023-12-16 05:08 GMT   |   Update On 2023-12-16 05:32 GMT
  • 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு.
  • பாகிஸ்தானில் நடத்தப்படும் போட்டியில் இந்தியா கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐ.சி.சி. பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

2009-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அப்போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்தியா மோதிய ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன. 2025-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது சந்தேகம்தான்.

Tags:    

Similar News