கிரிக்கெட் (Cricket)

மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வது போன்று வீடியோ: யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் மீது புகார்

Published On 2024-07-15 13:05 GMT   |   Update On 2024-07-15 13:05 GMT
  • லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
  • வெற்றி கொண்டாட்டத்தின்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் லெஜெண்ட் கிரிக்கெட்டில் விளையாடினர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் மூன்று பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தை (2000) மீறியதாக மெட்டா இந்தியாவின் மானேஜிங் டைரக்டரும், துணை தலைவருமான சந்தியா தேவநாதன் மீதும் புகர் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீசார் இந்த புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டுமு் போதாது. அவர்களுடைய நடவடிக்கைக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News