தொடர்ந்து பேட்ஸ்மேன்களை சீண்டும் ராணா- ஒரு போட்டியில் விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்
- மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார்
- தனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
அப்போட்டியில் மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்தினார் ராணா. அதன் பிறகு அவர் மீண்டும் பிளையிங் கிஸ் கொடுக்க முயன்று பின்பு தன்னை கட்டுப்படுத்தினார். ஆனாலும் அதற்கு பதிலாக அவர் வெளியே போ என்றவாறு சைகை செய்தார்.
இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிவீரர் ஹர்ஷீத் ராணாவுக்கு 100% அபராதம் மற்றும் ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.