கிரிக்கெட் (Cricket)

இரானி கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டம் வென்றது ரெஸ்ட் ஆப் இந்தியா

Published On 2023-03-05 19:53 GMT   |   Update On 2023-03-05 19:53 GMT
  • இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசம், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
  • இதில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போபால்:

மத்திய பிரதேசம், இதர இந்தியா (ரெஸ்ட் ஆப் இந்தியா) அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடந்தது.

முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 484 ரன்னும், மத்திய பிரதேச அணி 294 ரன்னும் எடுத்தன. பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதத்தின் உதவியால் 246 ரன்கள் குவித்தது. இதையடுத்து மத்திய பிரதேச அணிக்கு 437 ரன்களை வெற்றி இலக்காக ரெஸ்ட் ஆப் இந்தியா நிர்ணயித்தது. தொடரந்து ஆடிய மத்திய பிரதேசம் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹிமான்ஷூ மந்திரி 51 ரன்களுடனும், ஹர்ஷ் காவ்லி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி, ரெஸ்ட் ஆப் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் 5 பேர் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில், அந்த அணி 58.4 ஓவர்களில் 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரானி கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags:    

Similar News