கிரிக்கெட்
null

டி20 கிரிக்கெட்: கோலியை தொடந்து ரோகித் சர்மா ஓய்வு

Published On 2024-06-30 01:23 GMT   |   Update On 2024-06-30 03:03 GMT
  • இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
  • என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியுடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. டி20 கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே இதனை ரசித்து விளையாடி வருகிறேன். இந்த பயணத்தின் எல்லா தருணங்களையும் நான் ரசித்தேன். நான் இந்த (கோப்பையை) மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது. என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்கள் எதுவும் பெரிதில்லை. இந்தியாவிற்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே என் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் டி20-யில் 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது டி20 பயணம் 2007-ல் அறிமுகமான டி20 உலகக் கோப்பையுடன் தொடங்கியது. அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, கேப்டனாக இந்தியாவை இரண்டாவது உலக கோப்பை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News