null
நாளை பிரதமரை சந்திக்கும் இந்திய அணி வீரர்கள்
- இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
- உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் பெரில் என்ற புயல் அவர்களை மேலும் 2 நாட்கள் பர்பட்டாசில் காக்க வைத்து விட்டது. இதனையடுத்து பர்பட்டாசில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூட திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பேரணி முடித்தபின் மும்பை வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது