கிரிக்கெட் (Cricket)
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடருக்கு ஓகே சொன்ன ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்
- தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
- ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாடும் இருதரப்பு போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.