கிரிக்கெட் (Cricket)

தூக்கத்தால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மிஸ் செய்த தஸ்கின் அகமது

Published On 2024-07-03 09:58 GMT   |   Update On 2024-07-03 10:27 GMT
  • டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தஸ்கின் அகமது விளையாடவில்லை.
  • பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லாததால் போட்டியில் விளையாடவில்லை.

டாக்கா:

வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. இதனால் அவர் போட்டியில் விளையாடவில்லை.

இதனால், ஹசன் சாகிப் மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் என்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வங்காளதேச அணி போட்டியை எதிர்கொண்டது. தஸ்கின் போட்டியில் விளையாடாமல் போனது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் நிபுணர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தஸ்கின் அகமது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அறையில் படுத்து தூங்கிய அவர், போட்டிக்காக விளையாட எழுந்து வரவில்லை. இதனால் அணி வீரர்களுக்காக தயாராக இருந்த பஸ்சிலும் அவர் ஏறவில்லை. சரியான நேரத்திற்கு வராத சூழலில் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அணி நிர்வாகமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின் பஸ்சை தவற விட்டதற்காக சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் தஸ்கின். ஆனாலும் அவரை இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வைக்கவேண்டாம் என அணியின் பயிற்சியாளர் முடிவு செய்திருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் தூக்கம் காரணமாக ஓட்டல் அறையில் மூத்த வீரர் ஒருவர் படுத்துக்கொண்டு, விளையாடாமல் போனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News