கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ்னு வந்தா சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது.. சால்ட் படைத்த சாதனைகள்

Published On 2024-06-20 09:34 GMT   |   Update On 2024-06-20 09:34 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
  • இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-

478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)

423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)

422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)

420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)

390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)

இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)

32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்

26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து

25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா

24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா

இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-

116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014

101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021

99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012

87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024

86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022

Tags:    

Similar News