கிரிக்கெட் (Cricket)

சுப்மன் கில்லை விட அவர்தான் கேப்டனுக்கு தகுதியானவர்- அமித் மிஸ்ரா

Published On 2024-07-16 10:26 GMT   |   Update On 2024-07-16 10:26 GMT
  • இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை.
  • அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனால் சுப்மன்கில் கேப்டன்ஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து நடந்த 4 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து 4 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இந்நிலையில் அவருக்கு கேப்டன்ஷிப் பன்ன தெரியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 

இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. அது பற்றி எந்த யோசனையும் இல்லை. அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எதுக்கு கேப்டனாக நியமிக்கபட்டார் என்பது குறித்து தேர்வாளர்களை தான் கேட்க வேண்டும்.

கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்திய அணிக்காக டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பேட்டராக சிறப்பாக செயல்படுகிறார். எனவே பேட்டராக தகுதியானவர்.

அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியது, அணி நிர்வாகம் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்க விரும்பியதால் தான் என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சுப்மன் கில் அல்லது அது போன்ற எதையும் வெறுப்பவன் அல்ல, எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் ருதுராஜ் கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்ததால் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

டி20 உலகக் கோப்பையில் ருதுராஜ் ஒரு பேக்அப் பிளேயராக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு முழுமையான வீரர். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் - அவருடைய நுட்பம் அப்படிப்பட்டது. அவருடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது.

இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

Tags:    

Similar News