டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் - ஷாகித் அப்ரிடி கருத்து
- அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.
- ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும்.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் கிரிக்கெட்டில் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.
பாபர் ஆசமை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் அவருக்கு அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. நீண்ட வடிவ போட்டிகளில் அவர் கேப்டன் ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும் என்றார்.