கிரிக்கெட் (Cricket)
null

ஆரஞ்ச், பர்பிள் தொப்பிகளை கைப்பற்றிய ஆர்சிபி வீராங்கனைகள்

Published On 2024-03-18 02:12 GMT   |   Update On 2024-03-18 02:13 GMT
  • எலிஸ் பெர்ரி 9 போட்டிகளில் 347 ரன்கள் விளாசினார்.
  • ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பெண்களுக்கான பிரீமியர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் லீக்கில் ஆர்சிபி பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இதனால் அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டி வருகிறார்கள்.

இந்த தொடரில் ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை வென்றார். அவரது ஸ்கோரில் 41 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். சராசரி 69.4 ஆகும். டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 4 அரைசதங்களுடன் 331 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார்.

எலிஸ் பெர்ரி

அதேபோல் பந்து வீச்சிலும் ஆர்சிபி வீராங்கனைகள் அசத்தினர். ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும், மோலினிக்ஸ் 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

Tags:    

Similar News