கிரிக்கெட் (Cricket)

இன்னும் 2 தான்.. கோலியின் ஆல்டைம் சாதனையை முறியடிக்க இருக்கும் சிக்கந்தர் ராசா

Published On 2023-12-08 08:14 GMT   |   Update On 2023-12-08 08:14 GMT
  • முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 147 ரன்கள் எடுத்தது.
  • அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

ஹராரே:

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் பால்பிர்னி 32 ரன்னும், டெலனி 26 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் ராசா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 65 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14-வது ஆட்ட நாயகன் விருதை இவர் பெற்ற முகமது நபியை (14) சமன் செய்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 15 முறை பெற்றுள்ள நிலையில் அவரின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 முறை ஆட்டநாயகன் விருதை ராசா பெற வேண்டும். இவர்களை அடுத்து சூர்யகுமார் யாதவ் 13 முறையும் ரோகித் சர்மா 12 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.

நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வென்ற (6) விராட் கோலியை ஏற்கனவே சிகந்தர் ராசா (7) பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News