கிரிக்கெட் (Cricket)
null

90 வருட பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்த ஸ்மிரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி

Published On 2024-06-28 09:26 GMT   |   Update On 2024-06-28 09:39 GMT
  • ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
  • இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.

ஷபாலி வர்மா 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். 65 ஓவர் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. ஷபாலி வர்மா 175 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Tags:    

Similar News