சிஎஸ்கே அணியில் கலக்கிய பதிரனா.. ஒருநாள் அறிமுக போட்டியில் 16 வைடுகள் வீசி சொதப்பல்
- இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகள் அடங்கும். சென்னை அணியில் இடம் பெற்றிருந்த பதிரனா அசத்தலான பந்து வீச்சால் சென்னை மக்களின் மனதை கவர்ந்தார். டி20-யில் பட்டைய கிளப்பிய பதிரனா, ஒருநாள் போட்டியில் சோதப்பியது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் 3 ஓவர்களில் 7 வைடுகளை வீசிய அவர் அடுத்த 5 ஓவர் முடிவடைய நிலையில் 9 வைடுகளை வீசியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 4ஆம் தேதி நடக்க இருக்கிறது.