கிரிக்கெட்

போட்டிகளை இரவு 8 மணிக்கு ஒளிபரப்புவதால் இந்தியா வெல்கிறதா, எப்படி?: வாகனை கலாய்த்த கங்குலி

Published On 2024-06-29 10:16 GMT   |   Update On 2024-06-29 10:16 GMT
  • இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
  • மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.

பார்படாஸ்:

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.

இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News