லார்ட்ஸ் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்
- முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்னில் சுருண்டது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட்டானது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஒல்லி போப் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நூர்ஜே 3 விக்கெட்டும், ஜேன்சேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எர்வி பொறுப்புடன் ஆடி 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேன்சேன் 48 ரன்னிலும், கேப்டன் எல்கர் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நூர்ஜே 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து அணியை விட 161 ரன் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.