கிரிக்கெட் (Cricket)

இந்தியாவில் விளையாட்டுத்துறை வளர்ச்சி 11% : ரூ.15,766 கோடி வருவாய்

Published On 2024-03-19 13:05 GMT   |   Update On 2024-03-19 13:05 GMT
  • இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
  • இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது

விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.

மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News