கிரிக்கெட் (Cricket)

கேப்டன் டோனியின் காயம் சரியாகிவிட்டது, ஸ்டோக்ஸ் ஒரு வாரம் வெளியே இருப்பார்: பயிற்சியாளர் தகவல்

Published On 2023-04-22 07:40 GMT   |   Update On 2023-04-22 07:40 GMT
  • கேப்டன் டோனியின் கீப்பிங் திறமைக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பேட்டி
  • காயம் காரணமாக விளையாட முடியாது என தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார்.

சென்னை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் காயம் கவலைப்படும் வகையில் இல்லை என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

முந்தைய போட்டியின்போது காயமடைந்த டோனி நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இந்த போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் கூறியதாவது:-

பென் ஸ்டோக்ஸ் காயத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஒரு வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரது காயம் பெரிய அளவில் இல்லை. உடற்தகுதி பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறார்.

டோனியைப் பொருத்தவரை உடற்தகுதி நன்றாக இருக்கிறது. அவர் தனது காயத்தை சரியாக கையாள்கிறார். விளையாட தயாராக இருக்கிறார். அவர் எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார். காயம் காரணமாக தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாது என்று அவருக்குத் தெரிந்தால், அவரே விலகி வெளியில் இருந்துவிடுவார். அவரைப்பற்றி எந்த கவலையும் இல்லை. அதேசமயம் அவர் ஸ்டம்புக்கு பின்னால் கீப்பராக அவரது திறமைகளுக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News