தொடக்க வீரராக விராட் வேண்டாம்- இந்தியாவுக்கு அறிவுரை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்
- விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
- இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.
நியூயார்க்:
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடரின்போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன்.
அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.
என்று இயன் பிஷப் கூறினார்.