null
டி20 உலகக் கோப்பை: ரிங்கு இடம் பெறுவது சந்தேகம்- காரணம் இதுதான்
- ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
- ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் மே 26-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சொதப்பியதால், கடைசி 10-15 பந்துகளுக்காக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் பிசிசிஐயிடம் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற பினிஷர்களே அணிக்கு போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது. டி20 உலகக் கோப்பை அணித் தேர்வை கருத்தில்கொண்டு, சிஎஸ்கே, கேகேஆர் இடையிலான போட்டிக்கு ஸ்லோ விக்கெட்டை தயார் செய்திருந்தனர்.
ஆனால், அந்த ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் 14 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காமல் 9 ரன்களை மட்டும் எடுத்து, தேஷ்பண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சொதப்பியதால், அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.