கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு சச்சின், எம்.எஸ். டோனி வாழ்த்து

Published On 2024-06-30 02:35 GMT   |   Update On 2024-06-30 02:35 GMT
  • 96 பேட்ச்-இன் வழிகாட்டுதலில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
  • உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெற்றி பெற்றதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி கடைசி பந்தில் வெற்றியை உறுதிப்படுத்தியது.

2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். டோனி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சச்சின் தனது வாழ்த்து செய்தியில், இந்திய அணியின் ஜெர்சியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரமும் நம் நாட்டின் குழந்தைகள் தங்களின் கனவை அடைய ஒருபடி முன்னேற ஊக்கம் அளிக்கும். இந்தியா தனது 4-வது நட்சத்திரத்தை பெற்றது, டி20 உலகக் கோப்பையில் நமது இரண்டாவது கோப்பை.


2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் திணறியது முதல் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட்டின் பவர்ஹவுஸ் ஆக உருவாவது என வெஸ்ட் இண்டீஸ்-இல் இந்திய கிரிக்கெட் வாழ்க்கையில் முழுமையை கொடுக்கிறது. எனது நண்பர் ராகுல் டிராவிட்-க்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 2011 உலகக் கோப்பையை தவரவிட்டது முதல் இந்த டி20 உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. அவருக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ரோகித் பற்றி என்ன சொல்வது? தலைசிறந்த கேப்டன்சி. 2023 ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை கடந்து நமது வீரர்களை ஊக்கப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கு தயார்படுத்திய விதம் சிறப்பான ஒன்று. ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது, விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது இரண்டுமே கச்சிதமான தேர்வு. தேவையான நேரத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ராகுலுடன் பராஸ் மாம்ப்ரே மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் 1996 ஆம் ஆண்டில் தான் இந்திய அணியில் அறிமுகமாகினர். 96 பேட்ச்-இன் வழிகாட்டுதலில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை பார்க்க அருமையாக உள்ளது.

மொத்தத்தில் கூட்டு முயற்சி. அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர் குழு மற்றும் பிசிசிஐ-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

சச்சினை தொடர்ந்து எம்.எஸ். டோனி வெளியிட்ட பதிவில், உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. எனது இதயதுடிப்பு உச்சத்தில் இருந்தது. அமைதியாக இருந்தது நல்லது. தன்னம்பிக்கையுடன் நீங்கள் செய்ததை செய்தீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சார்பில் உலகக் கோப்பையை கொண்டு வந்ததற்கு மிகப் பெரிய நன்றி. வாழ்த்துக்கள். விலை மதிப்பில்லா பிறந்தநாள் பரிசுக்கு நன்றி, என குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News