null
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 364 ரன்களுக்கு ஆல் அவுட்
- இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட் வீழ்த்தினார்.
- ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இலங்கை -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 70-வது ரன்னில் 2-வது விக்கெட்டை இழந்து.
இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித் - லபுசேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுசேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். 104 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹெட் 12 ரன்னிலும் கிரீன் 4 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனது ஸ்டீவ் ஸ்மித் 28-வது சதத்தை பதிவு செய்தார். 18 மாதங்களுக்கு பிறகு இவர் சதமடித்துள்ளார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 2-வது நாள் இன்று தொடங்கியது. ஸ்மித் - அலெக்ஸ் ஜோடி தொடர்ந்து ஆடினர். 28 ரன்னில் அலெக்ஸ் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். ஸ்டார்க் 1, கம்மின்ஸ் 5, லயன் 5, ஸ்வெப்சன் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித் 145 ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பிரதாப் ஜெயசூர்யா முதல் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை கைப்பறினார் என்பது குறிப்பிடத்தக்கது.