கிரிக்கெட் (Cricket)
null

உலகக்கோப்பை கிரிக்கெட்: 102 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

Published On 2023-10-07 17:06 GMT   |   Update On 2023-10-07 17:42 GMT
  • தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
  • தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதுடெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்க அணி ரன்மழை பொழிந்தது. குயிண்டன் டாக் (100 ரன்கள்), வாண்டர் உசேன் (108 ரன்கள்) ஏய்டென் மார்கரம் (106 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் குசல் பெரேரா 7, குசல் மெண்டிஸ் 76, சதீர சமரவிக்ரம 23, தனஞ்ஜெயா டி சில்வா 11, சரித் அசலங்கா 79, தசுன் ஷனகா 68, கசுன் ராஜிதா 33, மதீஷா பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்நிலையில் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News