ரிங்கு சிங் மனம் தளரக்கூடாது: இது தொடக்கம்தான்- கங்குலி
- போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும்.
- தேர்வாளர்கள் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான எதிர்கால திட்டத்தில் 26 வயதான ரிங்கு சிங் இடம் பிடித்திருந்தார். என்றாலும் பிசிசிஐ நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்ல திட்டமிட்டதால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இது தொடக்கம்தான், ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கங்குலி கூறுகையில் "போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். ஆகவே, அவர்கள் (தேர்வாளர்கள்) கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர். இதனால் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இது தொடக்கம்தான். இதற்காக அவர் மனம் தளரக் கூடாது.
தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான அணி. அனைவரும் மேட்ச் வின்னர்கள். 15 பேரும் தேர்வுக்கான வீரர்கள். ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்றார்.