உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ஒரே ஓவரில் அடுத்தடுத்து அவுட்டான விராட் கோலி, ஜடேஜா
- 4ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
- 5ம் நாள் தொடக்கத்தில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.