கிரிக்கெட் (Cricket)
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய ஸ்மிருதி மந்தனா- வைரல் வீடியோ
- முதலில் ஆடிய இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 136 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை மந்தனா வீழ்த்தினார்.
பெங்களூரு:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசிய மந்தனா, தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. அந்த அணிக்கு 84 பந்துகளில் 141 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகிறது.