கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்
- வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
- ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.
இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும்.
இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது.
இந்த ஆட்டத்தின்போது பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது.
முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.